Wednesday, December 23, 2009

ஏன் இத்தனை வன்முறைகள்...

அன்புடையீர், வணக்கம்...
என்ன நடந்து கொண்டிருக்கிறது ஆந்திராவில்? ஏன் இத்தனை வன்முறைகள், வெறியாட்டங்கள். அரசியல் ஆதாயத்திற்காக மக்களை ஏன் வதைக்கிறார்கள்?
நாட்டில் பயங்கரவாதம், விலை வாசி அதிகரிப்பு, பன்றி காய்ச்சல், இன்னும் எவ்வளவோ பிரச்னைகள் இருக்கின்றன, இப்போது இந்த தனித் தெலுங்கான மிகவும் முக்கியமா?
இப்பிரச்னையை நாடாளுமன்றத்தில் முறையிடப்போய் இரு அவைகளும் ஒத்திவைக்கபடுகின்றன. இதனால் யாருக்கு லாபம், மக்களாகிய நமக்கா?

தேவை இல்லாமல் இந்த பிரச்சனையை கிளப்பி விடுவதால், குழந்தைகளின் கல்வி பாதிப்படைகின்றன. உடல் நிலை சரி இல்லாத மக்களின் கோபத்திற்கு ஆளாகிறார்கள் இந்த வன்முறையாளர்கள்.

இதை பெரிது படுத்தாமல் விடுவதே நன்மை தரும் செயல். என்ன செய்யப் போகிறார்கள் இந்த அரசியல்வாதிகள்? "காந்தி வாங்கி தந்த சுதந்திரத்தை இப்படி வீணடிக்கிறார்களே" என்று மனம் கலந்குவதைத் தவிர வேறு என்ன செய்ய இயலும் நம்மைப் போன்ற பாமரர்களால்...

No comments:

Post a Comment